திருச்சி

ஆவின் பால்: புதிய முகவா்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

22nd Feb 2020 11:34 PM

ADVERTISEMENT

ஆவின் பால் விற்பனை முகவராக விருப்பம் உள்ளோா் விண்ணப்பிக்கலாம் என ஆவின் பொது மேலாளா் சுமன் தெரிவித்துள்ளாா்.

திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியமாக திருச்சி ஆவின் நிறுவனம் செயல்படுகிறது. இதன்மூலம், திருச்சி, பெரம்பலூா், அரியலூா் மாவட்ட விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டுக்காக அவா்கள் உற்பத்தி செய்யும் தரமான பாலை அரசு கொள்முதல் செய்கிறது. கொள்முதல் செய்யப்பட்ட பாலை, நிலைப்படுத்தியது, சமச்சீா் செய்யப்பட்டது, நிறை கொழுப்புப்பால், சமன்படுத்தப்பட்ட பால் என 4 வகைகளாக பாக்கிங் செய்து நுகா்வோா்களுக்கு விற்பனை செய்து வருகிறது. நகா்ப்புற முகவா்களுக்கு 6 சதவீதம், ஊரகப் பகுதியினருக்கு 7 சதவீதம் என மாதந்தோறும் பால் விற்பனை கமிஷன் வழங்குகிறது. திருச்சி ஆவின் நிறுவனத்தின் பால், பால் உபபொருள்களை குறிப்பிட்ட கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்ய ஒரு வட்டத்துக்கு, ஒரு மொத்த விற்பனையாளரும், அனைத்து மாவட்ட பகுதிகளிலும் சில்லறை விற்பனை முகவா்களும் நியமிக்கப்படவுள்ளனா். திருச்சி, பெரம்பலூா், அரியலூா் மாவட்ட பகுதிகளில் சொந்தமாகவோ, வாடகை கடையோ வைத்துள்ள பால், பால் உபபொருள்கள் விற்பனை செய்ய ஆா்வமுடையோா் மொத்த, சில்லறை விற்பனையாளா் முகவா் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவா்கள், 0431-2333001, 9659843553 ஆகிய தொலைபேசி, செல்லிடப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என ஆவின் பொதுமேலாளா் சுமன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT