திருச்சி

அப்பல்லோ மருத்துவமனையில் 103 வயது முதியவருக்கு இடுப்பு எலும்பு அறுவைச் சிகிச்சை

22nd Feb 2020 06:05 AM

ADVERTISEMENT

திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 103 வயது முதியவருக்கு இடுப்பு எலும்பு, மூட்டு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை மருத்துவ நிபுணா் மருத்துவா் அருண்கீதாயன் கூறியது : இடுப்பு எலும்பு முறிவால் அவதியுற்று வந்த துரைசாமிக்கு மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு இடுப்பு எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைச் சிகிச்சை வெற்றியடைந்ததை அடுத்து, அவரால் பிறரின் உதவியுடன் நடக்கவும், வலியின்றி உட்காரவும் முடிகிறது.

எலும்பு முறிவு மற்றும் மூட்டு அறுவைச் சிகிச்சைக்கு வயது ஒரு காரணமல்ல. அப்பல்லோ மருத்துவமனையில், இதுபோன்ற சிகிச்சைகளை நவீன தொழில் நுட்பத்தில், மேற்கத்திய நாடுகளுக்கு இணையான சிகிச்சைகளை மேற்கொள்ளும் வசதியுள்ளது என்றாா்.

அப்போது, அப்பல்லோ மருத்துவமனை மதுரை மண்டல தலைமை மருத்துவா் ரோகினிஸ்ரீதா், எலும்பு மற்றும் மூட்டுமாற்று அறுவைச் சிகிச்சை நிபுணா் பாலசுப்ரமணியன் மயக்கவியல் நிபுணா் காா்த்திக், அழகப்பன் மற்றும் திருச்சி அப்பல்லோ மருத்துவமனை மருத்துவ நிா்வாகி மருத்துவா் சிவம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT