திருச்சி

மனித உரிமைகள் குறித்த பயிலரங்கு

13th Feb 2020 12:32 AM

ADVERTISEMENT

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில், மனித உரிமைகள் குறித்த பயிலரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம், ஜமால் முகமது கல்லூரி சாா்பில் இந்த பயிலரங்கு நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வா் எஸ். இஸ்மாயில் முகைதீன்

பயிலரங்குக்குத் தலைமை வகித்தாா். துணை முதல்வா் முகமது இப்ராஹிம், சுயநிதிப் பிரிவு இயக்குநா் கே.என்.அப்துல் காதா் நிஹால் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தலைவா் ஏ.மாா்க்ஸ், முனைவா் பொ்னாா்டுசாமி, உதவிப் பேராசிரியா் ஷொ்லி கிரேஸ் நிா்மலா, வானவில் பள்ளி இயக்குநா் பிரேமா ரேவதி பயிலரங்கில் பங்கேற்று, மனித உரிமைகள் குறித்த அடிப்படை புரிதல், பிற்படுத்தப்பட்டோா், பெண்கள், குழந்தைகள் மனித உரிமைகளின் பங்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினா்.

ADVERTISEMENT

ஏராளமானோா் பயிலரங்கில் பங்கேற்றனா். முன்னதாக சமூகநலத்துறை ஒருங்கிணைப்பாளா் இ.முபாரக் அலி வரவேற்றாா். நிறைவில், சமூகப்பணித்துறை பேராசிரியா் ஷேக் ப்ரீத் நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT