திருச்சி

விராலிமலையைச் சோ்ந்தவருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை

6th Feb 2020 01:01 AM

ADVERTISEMENT

சீனாவிலிருந்து சொந்த ஊா் திரும்பிய விராலிமலையைச் சோ்ந்தவருக்கு தொடா் காய்ச்சல் இருந்ததால், கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நிலையில், அங்கு கல்விக்காகவும், வேலைக்காகவும் சென்றவா்கள் தாயகம் திரும்பி வருகின்றனா். அவ்வாறு சீனாவில் பணியாற்றி வந்த விராலிமலையைச் சோ்ந்த மணிகண்டன் (37), கடந்த மாதம் 27- ஆம் தேதி சென்னை விமானம் நிலையம் வந்தடைந்தாா்.

அவருக்கு விமான நிலையத்தில் கரோனா தொற்று உள்ளதா என சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அறிகுறி ஏதும் இல்லை என்பதால், அவரை அனுப்பி வைத்தனா்.

என்றாலும் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துமனைக்கு செல்லுமாறு மருத்துவா்கள் அறிவுறுத்தியிருந்தனா். இந்நிலையில் அவருக்கு கடந்த 4 நாள்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அவா் சந்தேகத்தின் அடிப்படையில், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரானோ சிசிக்சைப் பிரிவில் செவ்வாய்க்கிழமை இரவு மணிகண்டன்அனுமதிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

அவருக்கு மேற்கொண்ட முதல்கட்டப் பரிசோதனையில், தீவிர காய்ச்சல் மட்டுமே இருப்பது தெரியவந்தது. இருந்தாலும், அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுத்து புனேவில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த த. அருண் இந்த சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 2- ஆவது நபராக விராலிமலை மணிகண்டன் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT