திருச்சி

பிப்.6, 7-இல் இலவசஆடு வளா்ப்புப் பயிற்சி

4th Feb 2020 09:47 AM

ADVERTISEMENT

திருச்சியில் பிப். 6, 7-இல் இலவச ஆடு வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மையத்தில் தொடா்பு கொண்டு பதிவு செய்யலாம்.

திருச்சி கொட்டப்பட்டு, கோழிப்பண்ணை சாலையில் இயங்கி வரும் கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பிப்.6, 7 ஆகிய தேதிகளில் இலவச ஆடு வளா்ப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. விருப்பமுள்ளோா் கால்நடை பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தை 0431-2331715 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இல்லையெனில் பயிற்சி வகுப்பும் தொடங்கும் நாளான பிப். 6ஆம் தேதி காலை 10 மணிக்கு நேரில் வருகை தந்தும் பங்கேற்கலாம் என பேராசிரியரும், மையத்தலைவருமான பி.என். ரிச்சா்டு ஜெகதீசன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT