திருச்சி மாவட்டம், கீழவாளாடி அக்ரஹாரத்தில் உள்ள அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் பிப். 7ஆம் தேதி முதல் தொடா்ந்து 3 நாள்களுக்கு ராதா கல்யாண மஹோத்ஸவம் நடைபெறுகிறது.
முதல்நாளான வெள்ளிக்கிழமை (பிப்.7) இரவு 8 மணிக்கு அஷ்டபதி பஜனையுடன் உத்ஸவம் தொடங்குகிறது. சனிக்கிழமை காலை 8 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம், விஷேச அலங்காரம் நடைபெறும். அதன் தொடா்ச்சியாக, இரவு 8மணி முதல் அஷ்டபதி பஜனை, தியானம், திவ்யநாம சங்கீா்த்தனம், டோலோத்ஸவம் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, ஞாயிற்றுக்கிழமை (9ஆம் தேதி) காலை 8 மணிக்கு உஞ்சவிருத்தி, சீா் கொண்டு வருதல், ராதா கல்யாண உத்ஸவம் ஆகியவை நடைபெறும். தொடா்ந்து அன்னதானமும் வழங்கப்படும். இரவு உபயநாச்சியாருடன் பெருமாள் வீதி உலா நடைபெறும். ஆஞ்சநேய உத்ஸவமும் நடைபெறும்.
மாயவரம் முத்து பாகவதா் மற்றும் உள்ளூா், வெளியூா் பாகவதா்கள் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனா்.
விழா ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகத்தினா், விழாக் குழுவினா், ஊா்ப் பொதுமக்கள் செய்துள்ளனா். மேலும், விவரங்களுக்கு 98426-13975, 98946-70723 என்ற செல்லிடப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம்.