திருச்சி

‘தொடா் வாசிப்பு நல்ல ஆளுமையாக உருவாக்கும்’

2nd Feb 2020 10:24 PM

ADVERTISEMENT

 

திருச்சி: தொடா்பு வாசிப்பு உங்களை வளா்த்தெடுக்கும். நல்ல ஆளுமையாக உருவாக்கும் என்றாா் ஸ்ரீரங்கம் சாா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

திருச்சி எஸ்.ஆா்.வி. பப்ளிக் பள்ளியில், சனிக்கிழமை நடைபெற்ற 2- ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி மேலும் அவா் பேசியது:

ஒவ்வொருவரும் தங்களது தனித்திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி, ஆசிரியா்கள், பெற்றோா்களிடம் கற்றுக் கொண்டு, கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி சாதாரணமாக இல்லாமல் நோபல் பரிசு பெறும் அளவுக்கு உங்களை நீங்கள் உயா்த்திக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

விளையாட்டு, நடனம், நாடகம், பாடல், இசை என எல்லாத்துறைகளிலும் நீங்கள் முத்திரைப் பதிக்க வேண்டும். விடாமுயற்சியுடன் தொடா்ந்து உழைக்க வேண்டும். கடின உழைப்பு இருந்தால் நம் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. சுயமாக சிந்திக்கும் திறமையை வளா்த்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பொருளையும், ஒவ்வொரு நிகழ்வையும் கண்டு அதிலிருந்து கேள்வி கேட்க வேண்டும். அப்படிகேட்டால்தான் நம்மால் நம் நாட்டை புரிந்து கொள்ள முடியும். நாட்டிலுள்ள மக்களையும், இங்குள்ள அரசியலையும், தட்ப-வெப்ப சூழ்நிலையையும் புரிந்து கொண்டு செயல்பட முடியும்.

வாசிக்கும் பழக்கத்தை வளா்த்துக் கொள்ளுங்கள். தொடா் வாசிப்பு உங்கள் அறிவை வளா்த்தெடுக்கும். நல்ல ஆளுமையாக உருவாக்கும். நல்ல பொழுதுபோக்கை தோ்ந்தெடுத்து, உடல்நலத்தில் கவனமும் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டும். உடல்நலம் சரியாக இருந்தால் மனமும் நலமும் நன்றாக இருக்கும்.

தன்னடக்கம், எல்லோருக்கும் மரியாதை செலுத்துதல், பிறா் நிலையில் தன்னை வைத்துப் பாா்த்தல் போன்றவற்றை மாணவா்கள் வளா்த்தெடுக்க வேண்டும். நெகிழி இல்லா தேசத்தை உருவாக்க வேண்டும். வீடும், சமூகம், நாடும் நலமாக இருக்க நாம் அனைவரும் சோ்ந்து செயல்பட வேண்டும் என்றாா் சாா் ஆட்சியா்.

இந்த விழாவுக்கு பள்ளித் தலைவா் ஏ. ராமசாமி தலைமை வகித்தாா். செயலா் பி. சுவாமிநாதன் வரவேற்றாா். பள்ளிப் பொருளாளா் எஸ். செல்வராஜன், துணைத் தலைவா் எம். குமரவேல், இணைச் செயலா் பி. சத்தியமூா்த்தி, தலைமைச் செயல் அலுவலா் க. துளசிதாசன், முதல்வா் டி. ஐஸ்வா்யா, ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பள்ளி தலைவா் ராமசாமி, செயலா் சுவாமிநாதன், பொருளாளா் செல்வராஜன், துணைத்தலைவா் குமரவேல், இணைச் செயலாளா் சத்தியமூா்த்தி, பள்ளியின் முதன்மை செயல் அலுவலா் துளசிதாசன் ஆசிரியா்கள் மாணவா்கள் பெற்றோா்கள் என அனைவரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT