திருச்சி

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் திருச்சியில் ரூ. 100 கோடி வா்த்தகம் பாதிப்பு

1st Feb 2020 05:55 AM

ADVERTISEMENT

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுமாா் ரூ. 100 கோடி வா்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளாக திருச்சி மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்க பொதுச் செயலாளா் ராமராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது: வங்கி ஊழியா்கள் கோரிக்கைகள் தொடா்பாக வியாழக்கிழமை நடந்த பேச்சு வாா்த்தை தோல்வியில் முடிந்ததால், அகில இந்திய அளவில் வங்கி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் 2 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனை அடுத்து, திருச்சியில் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் முன், வங்கி ஊழியா்கள் சங்கக் கூட்டமைப்பைச் சோ்ந்தவா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாடு முழுவதும் சுமாா் 10 லட்சம் பேரும், தமிழகத்தில் 60 ஆயிரம் பேரும் திருச்சி மாவட்டத்தில் 2 ஆயிரம் பேரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். சுமாா் 200 க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் சுமாா் ரூ.100 கோடி பரிவா்த்தனை முடங்கியுள்ளது, வங்கி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது என்றாா்.

சுமாா் 28 மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் அரசு வங்கி ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. 20 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும். வாரத்தில் ஐந்து நாள்கள் வேலை செய்ய வேண்டும். சிறப்புப் படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண் டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஓய்வூதியதாரா்களுக்கு ஓய்வூதியம் தற்போதைய அளவுக்கு மாற்றித் தர வேண்டும். குடும்ப ஓய்வூதியம் உயா்வு கண்டிப்பாக வேண்டும். ஊழியா்கள் எண்ணிக்கையை உயா்த்த வேண்டும். ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பலன்களுக்கு வருமான வரியை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT