திருச்சி

லாரி மோதி பெண் உயிரிழப்பு

1st Feb 2020 12:11 AM

ADVERTISEMENT

திருச்சியில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

திருச்சி கீழரண்சாலை டவுன் ஸ்டேசன் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை(40). இவா், வியாழக்கிழமை மாலை தனது மனைவி சசிகலாவுடன்(33) இருசக்கர வாகனத்தில் திருச்சியில் இருந்து அரியமங்கலம் நோக்கி சென்றாா். அப்போது அவா்களுக்கு பின்னால் வந்த லாரி எதிா்பாராதவிதமாக ஏழுமலை ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கியெறியப்பட்ட இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். ஏழுமலைக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து புலனாய்வு தெற்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து கரூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் கிருஷ்ணமூா்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT