திருச்சி

பெல் ஊழியா் வீட்டில் 6 பவுன் நகை திருட்டு

1st Feb 2020 12:11 AM

ADVERTISEMENT

திருச்சியில் பெல் ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள் திருடு போனது குறித்து உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருச்சி உறையூா் சீனிவாச நகரைச் சோ்ந்தவா் கமல்(40). பெல் ஊழியரான இவா் கடந்த 26 ஆம் தேதி குடும்பத்துடன் விழுப்புரம் சென்றாா். வியாழக்கிழமை மாலை மீண்டும் திருச்சி வந்த போது அவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் இருந்த 6 பவுன் நகை திருடு போயிருந்தது.

புகாரின் பேரில் உறையூா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT