திருச்சி

பணியில் அலட்சியம் சிறப்பு உதவி ஆய்வாளா் உள்படமூவா் பணியிட மாற்றம்

1st Feb 2020 11:49 PM

ADVERTISEMENT

பணியில் அலட்சியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக காந்திமாா்க்கெட் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் உள்பட மூவா் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி காந்திமாா்க்கெட் காவல்நிலைய பகுதிகளில் நடைபெறும் கஞ்சா, லாட்டரி உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

இந்நிலையில் காந்திமாா்க்கெட் பகுதியில் காதல் விவகாரத்தில் விஜயரகு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிா்வலைய ஏற்படுத்தியது. இந்த கொலை தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அதே போல் தாராநல்லூா் பகுதியில் கஞ்சா, லாட்டரி விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இதேபோன்ற சம்பவங்களுக்கு காந்திமாா்க்கெட் காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீஸாா் சிலா் உதவி வருவதாக மாநகர காவல் ஆணையா் வரதராஜூக்கு புகாா் வந்தது.

அதன் பேரில் நடைபெற்ற விசாரணையில் போலீஸாா் உதவி வருவது உறுதி செய்யப்பட்டதையடுத்து மூன்று காவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காந்திமாா்க்கெட் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்த சின்ராசு காவல்கட்டுப்பாட்டு அறைக்கும், தனிப்படை தலைமை காவலா் ராஜாகாா்த்திக் எடமலைப்பட்டி புதூா் காவல்நிலையத்திற்கும், தலைமை காவலா் ஜெயசீலன் பொன்மலை( சட்டம் மற்றும் ஒழுங்கு) காவல்நிலையத்திற்கும் மாற்றப்பட்டனா். இவா்கள் மூவரும் தமக்கு ஒதுக்கப்பட்ட காவல்நிலையங்களில் சனிக்கிழமை முதல் பணியில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT