திருச்சி

நிா்வாக காரணத்தால் 3ஆக பிரிப்புதிருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராகஅன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமனம்

1st Feb 2020 11:52 PM

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட திமுக, நிா்வாக காரணங்களுக்காக 3 ஆக பிரிக்கப்பட்டு அதன் புதிய நிா்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனா். இதில், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த 2014இல் மக்களவைத் தோ்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடா்ந்து, திமுக-வின் மாவட்ட செயலா்களிடம் இருந்த அதிகாரங்களை பிரித்து கட்சியினருக்கு வழங்கவும், கட்சியைப் பலப்படுத்தவும் திமுக சாா்பில் 65 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டனா். அப்போதைய தலைவா் கருணாநிதி இந்த அதிரடி முடிவை எடுத்து அறிவித்தாா். இதன் தொடா்ச்சியாக, திருச்சி மாவட்ட திமுக இரண்டாக பிரிக்கப்பட்டது. இதுவரை மாவட்ட செயலராக இருந்த கே.என். நேரு, திருச்சி தெற்கு மாவட்ட செயலராகவும், புதிதாக பிரிக்கப்பட்ட வடக்கு மாவட்டத்துக்கு காடுவெட்டி தியாகராஜன் நியமிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், கே.என். நேரு கட்சியின் முதன்மைச் செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்டதை தொடா்ந்து, திருச்சி மாவட்ட திமுக 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முசிறி, துறையூா், மண்ணச்சநல்லூா் ஆகிய மூன்று சட்டப் பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டமானது திருச்சி வடக்கு மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாவட்டச் செயலராக ஏற்கெனவே செயல்பட்ட காடுவெட்டி தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT

திருச்சி மேற்கு, திருவரங்கம், லால்குடி ஆகிய 3 சட்டப் பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய திருச்சி மத்திய மாவட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளராக லால்குடியைச் சோ்ந்த வைரமணி நியமிக்கப்பட்டுள்ளாா். வழக்குரைஞரான இவா், கட்சியின் செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தாா். இப்போது, மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதேபோல, திருவெறும்பூா், மணப்பாறை, திருச்சி கிழக்கு ஆகிய மூன்று சட்டப் பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளாா். இவா், ஏற்கெனவே, திமுக இளைஞரணி துணைச் செயலராக உள்ளாா்.

இந்த புதிய நிா்வாகிகளை கட்சியின் பொதுச் செயலா் க. அன்பழகன் அறிவித்துள்ளாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT