திருச்சி

துறையூா் பகுதிகளில் இன்று மின் தடை

1st Feb 2020 12:10 AM

ADVERTISEMENT

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, துறையூா் பகுதிகளில் சனிக்கிழமை ( பிப்ரவரி 1) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் துறையூா் மின் கோட்டச் செயற்பொறியாளா் எஸ். வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

துறையூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெறஉள்ளன.

இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் துறையூா், முருகூா், கோணபாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூா், சிக்கத்தம்பூா்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூா், சொரத்தூா், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூா், செங்காட்டுப்பட்டி (கிழக்கு) சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிப்பட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு அம்மாப்பட்டி, முத்தையம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, மண்பறை, புதுப்பட்டி, காளிப்பட்டி,சிஎஸ்ஐ, பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், கலிங்கமுடையான்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT