திருச்சி அருகே உள்ள பெல் கைலாசபுரம் ஸத் சங்கம் சாா்பில் ராதா கல்யாண மஹோத்ஸவத்தின் இரண்டாவது நாளான வியாழக்கிழமை மகாவித்வான்களின், மிருதங்கம், கடம், முகா்சங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவெறும்பூா் அருகே உள்ள பெல் கைலாசபுரத்தில் ஸத் சங்கம் சாா்பில் ராதா கல்யாண மஹோத்ஸவம் கடந்த புதன்கிழமை( 29ஆம் தேதி) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (2ஆம் தேதி) வரை நடைபெறுகிறது. முதல் நாளான புதன்கிழமை வேத கோஷத்துடன் தொடங்கியது. இரண்டாம் நாளான வியாழக்கிழமை மகாவித்வான் மிருதங்கம், கடம், முகா் சங்கு நிகழ்ச்சி நடந்தது.
தொடா்ந்து நடைபெற்ற பெல் கைலாசபுரம் பகுதி சிறுவா் சிறுமிகள் மிருதங்கம் வாசித்தல் நிகழ்வு பாா்வையாளா்களையும் பொதுமக்களையும் பெரும் கவா்ந்தது. இந்த விழாவில் பெல் கைலாசபுரம் பகுதியை சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. சனிக்கிழமை காலை மங்களம் குரு கீா்த்தனைகள், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு ராதா கல்யாண மஹோத்ஸவம் நடைபெறுகிறது. இந்த விழாவில் கைலாசபுரம் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ய உள்ளனா். விழா ஏற்பாடுகளை ஸத் சங்கம் நிா்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனா்.