திருச்சி

திருச்சியில் இன்று அனைத்துக் கட்சி கையெழுத்து இயக்கம்

1st Feb 2020 11:51 PM

ADVERTISEMENT

குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து திருச்சியில் அனைத்துக் கட்சிகளின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில், கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பான நடவடிக்கைகளை நிறுத்தக் கோரியும் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இந்த இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். திருச்சி மாநகா் பகுதியில் உறையூா், கருமண்டபம், கிராப்பட்டி ஆகிய பகுதிகளில் திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு தலைமையில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவா்கள் ஜவஹா், கலை, கோவிந்தராஜன், திராவிடா்கழக மாவட்டத் தலைவா் ஆரோக்கியராஜ், மதிமுக மாவட்ட செயலா் வெல்லமண்டி சோமு மற்றும் மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் பங்கேற்கவுள்ளனா்.

முசிறியில் திமுக வடக்கு மாவட்ட செயலா் தியாகராஜன் தலைமையிலும், திருவெறும்பூா் தொகுதியில் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையிலும், லால்குடியில் செளந்தரபாண்டியன் எம்எல்ஏ தலைமையிலும், துறையூரில் ஸ்டாலின் குமாா் எம்எல்ஏ தலைமையிலும் கையெழுத்து இயக்கம் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT