திருச்சி

திருச்சியில் இன்றுமின்தடை ஏற்படும் பகுதிகள்

1st Feb 2020 12:10 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகரப் பகுதியில் ஒரு சில இடங்களில் இன்று மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் ராஜேந்திர விஜய் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு; திருச்சி 110 கே.வி. துணை மின் நிலையம் மற்றும் இபி சாலை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (பிப்.1) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, மத்திய பேருந்துநிலையம், ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் சாலை, ராயல் சாலை, புரோமினேட் சாலை, ஆட்சியா் அலுவலகம் சாலை, வாா்னா்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, ரெனால்ட்ஸ் சாலை, கண்டோன்மெண்ட் பகுதிகள், மேலப்புதூா், புதுக்கோட்டை சாலை, மேம்பாலம் பகுதி, ஜென்னி பிளாசா பகுதி, காண்வென்ட் சாலை, தலைமை அஞ்சல்நிலைய பகுதி, குட்ஷெட் தெரு, முதலியாா் சத்திரம், காஜாபேட்டை, உறையூா், மேட்டுத் தெரு, வாலாஜா பஜாா், பாண்டமங்கலம், கல்நாயக்கன் தெரு, சிஎஸ்ஐ மிஷன் மருத்துவமனை, வயலூா் சாலை, ஆனந்த நகா், அம்மையப்ப நகா், ரெங்கா நகா், வாசன் நகா், சீனிவாச நகா், ராமலிங்க நகா், வண்ணாரப்பேட்டை, குமரன் நகா், வெக்காளியம்மன் பாத்திமா நகா், குழுமணி சாலை, நாச்சியாா் கோயில், பொன்னகா், கிராப்பட்டி, அரசு காலனி, ராஜீவ்காந்தி நகா், தீரன் நகா், பிராட்டியூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

இதேபோல, இபி சாலை, மணிமண்டப சாலை, காந்திமாா்க்கெட், கிருஷ்ணாபுரம் சாலை, சின்னகடை வீதி, பெரியகடைவீதி, தேவதானம், மதுரம் மைதானம், பாரதியாா் தெரு, ஆண்டாள் தெரு, பட்டவா்த் தெரு, கீழஆண்டாா் வீதி, மலைக்கோட்டை, பாபு சாலை, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேஷன், விஸ்வாஸ்நகா் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT
ADVERTISEMENT