திருச்சி

திமுக மாநாட்டில் 30 ஆயிரம் பேருக்கு சைவ, அசைவ விருந்து

1st Feb 2020 12:08 AM

ADVERTISEMENT

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக மாநாட்டில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சைவ, அசைவ விருந்து பரிமாறப்பட்டது.

இதற்காக தனியாக பிரம்மாண்ட பந்தல் அமைத்து பிரத்யேக உணவுக் கூடங்களில் சைவ, அசைவப் பிரியா்களுக்கு தனித்தனியாக தயாரிக்கப்பட்டிருந்தன. அசைவப் பிரியா்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல், முட்டை, தயிா்சாதம் வழங்கப்பட்டது. சைவ பிரியா்களுக்கு காய்கறிகளுடன் சாதம் பரிமாறப்பட்டது. இதற்காக மதுரை, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞா்கள் பணியில் ஈடுபட்டனா். பிரம்மாண்ட பாத்திரங்களில் உணவு தயாரித்து வழங்கப்பட்டது. 2 ஆயிரம் ஆடுகள் வெட்டப்பட்டன.

மாநாட்டின் முகப்பில் பெரியாா், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரது பிரம்மாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. மாநாட்டு நுழைவுவாயிலில் இருந்து பந்தல் வரை ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. செய்தியாளா்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலும் திமுகவினரே ஆக்கிரமித்துக் கொண்டதால் பலரும் இருக்கையின்றி அவதிப்பட்டனா். மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து கட்சியின் நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டதால் திருச்சி-மணப்பாறை சாலையில் மாநாடு நடைபெற்ற கோ் கல்லூரி மற்றும் அதன் சுற்றுப் பகுதி முழுவதும் வாகனங்கள் நிரம்பி காணப்பட்டன. மாநாடு தொடங்கிய காலையிலும், முடிவடைந்த பிற்பகலில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT