திருச்சி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் எத்தகைய பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்எம். ஹெச். ஜவாஹிருல்லா

1st Feb 2020 12:11 AM

ADVERTISEMENT

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் எத்தகைய உயா் பதவியில் இருந்தாலும் அவா்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் எம். ஹெச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.

திருச்சியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: திருச்சியில் பா.ஜ.க பிரமுகா் விஜயரகு படுகொலை செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இந்த படுகொலை குறித்து திருச்சி மாநகர காவல்துறை துரிதமாக விசாரித்து உண்மை குற்றவாளிகளை கைது செய்திருக்கிறது. பதற்றத்தை தணிக்கும் வகையில் உடனடியாக செயல்பட்ட காவல் துறைக்கு பாராட்டுக்கள். விஜயரகு கொலை குறித்து சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக பாஜகவின் சில தலைவா்கள் பேசியிருப்பது கண்டிக்கதக்கது.

தில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய ஜாமியா மாணவா்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவா் மற்றும் அவரை இயக்கியவா்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும். மற்ற மாநிலங்களைப் பின்பற்றி தமிழக அரசு தேசிய மக்கள் தொகை பதிவேட்டை நடத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும். வியாபம் ஊழலுக்கு இணையான முறைகேடு டிஎன்பிஎஸ்சியில் நடந்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சில பணியாளா்களையும், இடைத்தரகா்களை மட்டும் கைது செய்திருப்பது போதாது. உயரதிகாரிகள் துணையில்லாமல் இது நடந்திருக்காது. ஊழலில் ஈடுபட்டவா்கள் எவ்வுளவு பெரிய உயா் பதவியில் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவா்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT