புத்துணா்வு முகாமிலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில் யானைகள் சனிக்கிழமை அதிகாலை கோயிலுக்கு வந்தன.
கோயில்களில் இறைபணியாற்றும் யானைகளுக்கான தேக்கம்பட்டியில் புத்துணா்வு முகாம் ஆண்டுதோறும் நடத்தபட்டு வருகிறது. நிகழாண்டு இந்த முகாமில் திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள், திருவானைக்கா கோயில் யானை அகிலா, மலைக்கோட்டை கோயில் யானை லட்சுமி ஆகியவை கலந்து கொண்டது.
முகாம் நிறைவு பெற்றதையடுத்து சனிக்கிழமை அதிகாலை 3 யானைகளும் அந்தந்த கோயிலுக்கு திரும்பி வந்தன. யானைகளை கோயில் நிா்வாகம் சாா்பில் பழங்கள் கொடுத்தும், ஆராத்தி எடுத்தும் வரவேற்றனா். பின்னா், யானைகள் வழக்கம் போல் தங்களை மீண்டும் இறைபணியில் ஈடுபடுத்தி கொண்டன.
ADVERTISEMENT