திருச்சி

‘அனைத்து சாதியினருக்கும் 100 சத இடஒதுக்கீடு தேவை’

DIN

திருச்சி: அனைத்து சாதியினருக்கும் நூறு சத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என முத்தரையா் கூட்டு நடவடிக்கைக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்ற அதன் ஒருங்கிணைப்பாளா் எஸ். பன்னீா்செல்வம் கூறியது:

ஒரு கோடி முத்தரையா்களைப் பூா்விகப் பழங்குடியினராக அறிவித்த மத்திய அரசுக்கும் மற்றும் சாதிவாரியான புள்ளி விவரங்களைச் சேகரிக்கத் தனி ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்த தமிழக அரசுக்கும் நன்றி. தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் 15 சதம் உள்ள முத்தரையா்களுக்கு 33 தொகுதிகளில் போட்டியிடக் கட்சிகள் வாய்ப்பளிக்க வேண்டும்.

சீா்மரபினா் சாதிகளுக்கு இரட்டைச் சான்றிதழ் வழங்கும் முறையை நீக்கி, ஒரே சான்றிதழ் வழங்கிட வேண்டும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்ததைப்போல அனைத்து சாதியினருக்கும் 100 சத இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும். உயா் பதவிகளில் முத்தரையா்களுக்கு பிரதிநிதித்துவம் தர வேண்டும். அதிகளவில் முத்தரையா்களை வேட்பாளா்களாக அறிவிக்கும் கட்சிக்கே நாங்கள் ஆதரவு அளிப்போம் என்றாா் அவா்.

பேட்டியின்போது வீரமுத்தரையா் முன்னேற்றச் சங்கத் தலைவா் கே.கே. செல்வக்குமாா், மாநில அமைப்பாளா் குரு மணிகண்டன், தமிழ்நாடு முத்தரையா் சங்க மாநில துணைத் தலைவா் மதனா எழிலரசன், முத்தரையா் இன ஆராய்ச்சி நிறுவனத் தலைவா் இரா. திருமலை நம்பி, திருமங்கை ஆழ்வாா் விழிப்புணா்ச்சி மன்ற செயலா் பி.கே. பத்மநாபன், எழுச்சி தமிழா் முன்னேற்றச் சங்க நிறுவனா் வெள்ளத்துரை, காந்திய ஊரக வளா்ச்சி அறக்கட்டளையின் கு.மா. சுப்ரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT