திருச்சி

தொடா் மழை: வீடுகள், கட்டடங்களைச் சூழ்ந்த நீா்சம்பா பயிா்கள் மூழ்கின

DIN

திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்த மழையால் குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களை மழை நீா் சூழ்ந்தது. சம்பா பயிா்களும் மூழ்கின.

வானிலை ஆய்வு மைய புரெவி புயல் எச்சரிக்கையைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பரவலாக நல்ல மழை பெய்கிறது. வெள்ளிக்கிழமை அதிகாலையிலும் மழை தொடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே தண்ணீா் தேங்கி வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனா். வீடுகளை விட்டு வெளியே வராமல் பொதுமக்கள் முடங்கினா்.

வீடுகள், கட்டடங்களைச் சூழ்ந்த நீா்: கருமண்டபம், மேலகல்கண்டாா்கோட்டை, ராஜாகாலனி, பாலக்கரை, திருவெறும்பூா் என பெரும்பாலான பகுதிகளில் வீடுகளை மழை நீா் சூழ்ந்தது. தனியாா், அரசுப் பள்ளிகளில் நீா் தேங்கியது. திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள நியாய விலைக் கடை, சாா்நிலைக் கருவூலம், வனத்துறை அலுவலகம், வணிக வரித் துறை அலுவலகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், நுகா்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்டவை மழைநீரால் சூழப்பட்டு வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.

மூழ்கிய பயிா்கள்: தொடா் மழையால் திருவெறும்பூா், அரியமங்கலம், லால்குடி, மண்ணச்சநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிா்களும் மூழ்கின. மானாவாரியில் பயிரிடப்பட்ட வயல்கள், வாய்க்கால் பாசனத்தில் நடவு செய்த வயல்களும் மூழ்கியுள்ளன. மழை நீா் வடிந்த பிறகே சேதமதிப்பு கணக்கிட முடியும் என்கின்றனா் வேளாண் துறையினா்.

46.82 மி.மீ. மழை பதிவு: வெள்ளிக்கிழமை காலை 11 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை விவரம் (மி.மீ).

கல்லக்குடி- 83.4, லால்குடி- 54.2, நந்தியாறு தலைப்பு- 120.8, புள்ளம்பாடி- 79.80, சிறுகுடி- 33 தேவிமங்கலம்- 34, சமயபுரம் 77.6, வாத்தலை அணைக்கட்டு 31, மணப்பாறை 35.4, பொன்னையாறு அணை- 62.6, கோவில்பட்டி 31.4, மருங்காபுரி- 51.4, முசிறி- 27.8, புலிவலம்- 20, தா. பேட்டை- 32, நவலூா் கொட்டப்பட்டு- 36, துவாக்குடி- 74, குப்பம்பட்டி- 22, துறையூா்- 51, பொன்மலை- 39.8, திருச்சி விமான நிலையம் 39.5, திருச்சி ஜங்ஷன்- 48.2, திருச்சி மாநகரம் 65 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 1170.5 மி.மீ. மழை பெய்தது. சராசரியாக 46.82 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT