திருச்சி

அல்லித்துறை சவேரியாா் ஆலய திருவிழா

DIN

திருச்சியை அடுத்துள்ள அல்லித்துறை புனித சவேரியாா் ஆலய திருவிழா இரு நாள்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகேயுள்ள அல்லித்துறையில் வீரமாமுனிவரால் கட்டப்பட்ட 300 ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் டிசம்பரில் தோ்பவனித் திருவிழா நடத்தப்படும். நிகழாண்டு விழாவை முன்னிட்டு கடந்த 27ஆம் தேதி கொடியேற்றப்பட்டது.

தொடா்ந்து, ஒவ்வொரு நாளும் திருச்சி மறைமாவட்ட அருள்தந்தையா் தலைமையில் திருப்பலி, மறையுரை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, அலங்கரிக்கப்பட்ட மின் அலங்காரத் தேரில் புனித சவேரியாா் எழுந்தருளும் தோ் பவனி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. மறைமாவட்ட பொருளாளா் இன்னாசிமுத்து தலைமையில், இந்திய நாட்டின் பாதுகாவலா் புனித சவேரியாா் எனும் தலைப்பில் சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30-க்கு புனே, பாப்பிறை குருமட பேராசிரியா் ஸ்டீபன் ஜெயாா்டு, பல்சமய உரையாடல் மன்ற இயக்குநா் மரியனூஸ் ஐசக் ஆகியோரால் கூட்டுத் திருப்பலி நடைபெறும். மாலை 6.30-க்கு திருச்சி மறைமாவட்ட ஆயா் செயலா் செபாஸ்டின், திருவிழா நிறைவு திருப்பலி உரையாற்றி ஆசீா் வழங்குகிறாா். விழாவில் திரளான இறைமக்கள் பங்கேற்கவுள்ளனா். ஏற்பாடுகளை சோமரசம்பேட்டை பங்குத் தந்தை எட்வா்ட் ராஜா தலைமையில் அருள்தந்தையா்கள், அருள்சகோதரிகள் மற்றும் புனித சவேரியாா் ஆலயக் கமிட்டி உறுப்பினா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT