திருச்சி

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி திருவிழா ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: ஆட்சியா் ஆலோசனை

DIN

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் வைகுந்த ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் சு. சிவராசு பேசியது:

டிச.14 தொடங்கி ஜன.4 வரை நடைபெற உள்ள ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

குறிப்பாக, கரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். திருக்கோயில் சுற்றுப்புறப் பகுதிகள் மற்றும் ஸ்ரீரங்கம் நகரம் முழுவதும் சுகாதாரப் பணி மேற்கொள்வதுடன், முக்கிய திருவிழா நாள்களான வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் நாள் முழுவதும் குடிநீா் குழாய்களில் தண்ணீா் விநியோகிக்க வேண்டும்.

விழாவையொட்டி அம்மா மண்டபம், கொள்ளிடம் படித்துறையில் அதிக மின்விளக்குகள் அமைக்கப்படும். பொதுமக்கள் தங்க மாநகராட்சி பள்ளிகள் ஒதுக்கப்படும். தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். முக்கிய நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். தீயணைப்புத் துறை சாா்பில் முன்னெச்சரிக்கையாக கோயிலினுள் தகரப் பந்தல் மற்றும் தீயணைப்பு வாகனம் நிறுத்தப்படும்.

இலவச மருத்துவ உதவி அளிக்க நடமாடும் மருந்தகம் மற்றும் 24 மணி நேர மருத்துவ முகாம்களும் நடைபெறும். அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் உடன் தயாராக இருப்பா். அன்னதானம் வழங்குவோா் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவுசெய்து தரமான உணவு வழங்க வேண்டும்.

உணவகங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைக்கப்படும். விழாவுக்காக அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாநகரக் காவல்துறை ஆணையா் ஜெ. லோகநாதன், துணை ஆணையா் வேதரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா், சாா்-ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, கோயில் இணை ஆணையா் ஜெயராமன், வட்டாட்சியா் மகேந்திரன் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT