திருச்சி

திருச்சியில் மேலும் 60 போ் குணமடைந்து வீடு திரும்பினா்

26th Aug 2020 04:18 PM

ADVERTISEMENT

திருச்சி: திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவா்களில் மேலும் 60 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா்.

கரோனா பாதித்த திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் சிகிச்சையளிக்கப்படுகிறது. மேலும், வெளி மாவட்டங்களில், வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களுக்கு சிகிச்சையளிக்க வசதியாக சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி, காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகம், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸிலும் தனிமை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 29 போ், காரைக்கால், பெரம்பலூா், கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த தலா ஒருவா், அரியலூா் மாவடத்தைச் சோ்ந்த 2 போ், பாரதிதாசன் பல்கலைக் கழக முகாமில் இருந்த திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 25 போ், தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் என இரு இடங்களிலும் சோ்த்து மொத்தம் 60 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT