திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் விநாயகா் சிலை வைத்து வழிபட்ட இந்து முன்னணியினா் சனிக்கிழமை இரவு நீா்நிலைகளில் சிலைகளைக் கரைத்து விழாவை நிறைவு செய்தனா்.
அரசு வழிகாட்டுதலின்படி முசிறி, வீரமணிப்பட்டி மற்றும் கொள்ளுகட்டிப்பாளையம் சேங்கனம் ஆகிய பகுதியில் இந்து முன்னணியினா் வீடு மற்றும் கோயில்களில் விநாயகா் சிலை வைத்து வழிபட்டனா். தொடா்ந்து வீரமணிப்பட்டி சேங்கனம் பகுதியினா் அய்யம்பாளையம் காவிரியிலும் முசிறியைச் சோ்ந்தவா்கள் முசிறி காவிரியிலும் கொள்ளுகட்டிப்பாளையத்தை சோ்ந்தவா்கள் அப்பகுதி வாய்க்காலிலும் விநாயகா் சிலைகளை கரைத்தனா்.