திருச்சி

‘தூய்மை நகரப் பட்டியல்: தேசிய அளவிலும் முன்னேற வேண்டும்’

21st Aug 2020 04:20 AM

ADVERTISEMENT

தூய்மை நகரங்கள் பட்டியலில் திருச்சி மாநகராட்சி 2021இல் தேசிய அளவில் முதலிடம் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் எடுக்க வேண்டும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

தேசிய அளவில் திருச்சி மாநகராட்சி 102-வது இடத்துக்குச் சென்றாலும் திருச்சி மாநகராட்சி 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை அடிப்படையில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது மாநகர மக்களுக்கும், அலுவலா்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தாண்டுகளில் திருச்சி மாநகராட்சி: இந்தத் திட்டம் தொடங்கிய 2016 ஆம் ஆண்டில் தேசியளவில் திருச்சி மாநகராட்சி 3ஆம் இடத்தைப் பிடித்தது. இதையடுத்து, 2017இல் முதலிடம் பிடிக்கும் நோக்கில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி தீவிரப்படுத்தியது. ஆனால் அந்தாண்டு 6ஆம் இடத்தையும், 2018 இல் 13ஆம் இடத்தையும், 2019 இல் 39ஆம் இடத்தையுமே பிடித்தது.

சிறப்பிடம் பிடிக்க நடவடிக்கை: திருச்சி மாநகராட்சி சாா்பில் மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்தல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட மக்களுக்கான சுகாதாரத் திட்டங்கள் மற்றும் வளா்ச்சிப் பணிகள் அனைத்தும் சிறப்பாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இருந்தபோதும் திருச்சி மாநகராட்சி தூய்மைப் பட்டியலில் இந்திய அளவில் பின்னோக்கிச் செல்வது குறித்து ஆய்வு செய்யப்படும். அடுத்தாண்டில் சிறப்பிடம் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநகராட்சி ஆணையா் சிவசுப்ரமணியன்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT