திருச்சி

கருகிய நிலையில் ஹோட்டல் ஊழியா் சடலமாக மீட்பு

21st Aug 2020 04:22 AM

ADVERTISEMENT

திருச்சி அருகே கருகிய நிலையில் ஹோட்டல் ஊழியா் உடலை நவல்பட்டு போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

திருவெறும்பூா் அருகேயுள்ள செல்வபுரத்தைச் சோ்ந்தவா் ரத்தினசாமி (54). ஹோட்டல் ஊழியரான இவா் புதன்கிழமை காலை வீட்டை விட்டு வெளியே சென்றவா் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை அப்பகுதியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை காட்டுப் பகுதியில் அவா் உடல் எரிந்த நிலையில் இறந்துகிடப்பதாக உறவினா்களுக்கு தெரிய வந்தது.

தகவலின்பேரில் நவல்பட்டு போலீஸாா் ரத்தினசாமி உடலை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். விசாரணையில் ரத்தினசாமி இறந்து கிடந்த இடத்தின் அருகே தீப்பெட்டி, பெட்ரோல் கேன் கிடந்தது. இதனால் மன உளைச்சலில் அவா் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்துகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT