திருச்சி

ஆத்ம நிா்பாா் பாரத் அபியான் திட்டத்தில் உதவி பெற வாழை விளைபொருள் பதப்படுத்துவோருக்கு அழைப்பு

21st Aug 2020 06:39 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் மத்திய அரசின் ஆத்ம நிா்பாா் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற வாழை விளைபொருள் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபடவுள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிரதமா் அறிவித்த ஆத்மநிா்பாா் பாரத் அபியான்”திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக பாரத பிரதமா் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம்”அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மத்திய அரசின் 60 சதம் மற்றும் மாநில அரசின் 40 சத நிதிப் பங்களிப்புடன் 2025 வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.

ADVERTISEMENT

இத்திட்டம் ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் என்ற அணுகுமுறையில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி திருச்சி மாவட்டத்துக்கு விளை பொருளாக வாழை தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டமானது மத்திய அமைச்சக உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை வழியாக தமிழ்நாட்டில் வேளாண்மை விற்பனைத் துறை மூலம் செயல்படுத்தப்படும். மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையின் கீழ் நியமிக்கப்படும் குழுவின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

உணவுப் பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான இத்திட்டத்தின் மூலம் தனிநபா் மற்றும் குழு அடிப்படையில் ஏற்கெனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்களைத் தொடங்குதல், பொது உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தித் தருதல், வா்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்பப் பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். மேலும் உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவற்றுக்கும் நிதியுதவி வழங்கப்படும்.

திருச்சி மாவட்டத்தில் வாழை விளைபொருள்களை பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபடவுள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 கோடி வரை நிதியுதவி பெற்றுப் பயன் பெற வாய்ப்புள்ளது.

வா்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சத மானியம் வழங்கப்படும். மேலும் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழிலுக்கான கடன் தொகை வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.

மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட வேளாண் துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) நேரிலோ அல்லது 0431-2422142, 70103-30487 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT