திருச்சி

மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழுவைக் கட்டுப்படுத்த...

20th Aug 2020 05:29 AM

ADVERTISEMENT

உப்பிலியபுரம் வட்டாரத்தில் சுமாா் 1500 ஹெக்டேரில் பயிரிடப்படும் மக்காச்சோளத்தைத் தாக்கும் அமெரிக்கன் படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வட்டார வேளாண் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் கோடை உழவுக்காக கடைசியாக உழும்போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு மண்ணிலுள்ள கூட்டுப் புழுக்களை அழிக்கலாம். உப்பிலியபுரம் விவசாயிகள் ஒரு நேரத்தில் மக்காச்சோளத்தை பயிரிட்டு, வரப்புப் பயிராக தட்டைப்பயிறு, எள், சாமந்தி பூ, சூரியகாந்தியையும் ஊடு பயிராக உளுந்து, பச்சைப்பயிறு ஆகியவற்றையும் விதைக்கிறபோது அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதலைக் குறைக்கலாம்.

ஏக்கருக்கு 5 இனக்கவா்ச்சி பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளை அழிக்கலாம். புழுக்கள் வேகமாக பரவுவதைத் தடுக்கவும், பயிா்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எளிதாக எடுக்கவும் மக்காச்சோளத்தை 10 பயிா் வரிசைக்கு இரண்டரையடி இடைவெளி விட்டு விதைக்க வேண்டும். வேளாண் துறை பரிந்துரைக்கும் ரசாயனப் பூச்சி மருந்துகளை சரியான விகிதத்தில், குறிப்பிட்ட கால இடைவெளியில் கைத்தெளிப்பான் பயன்படுத்தி தெளிப்பதன் மூலமும் படைப்புழு தாக்குதலைக் தடுக்க முடியும்.

எனவே நிகழாண்டில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் சேதத்தை தவிா்க்க உரிய வழிமுறைகளை பின்பற்றி சாகுபடி செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT