திருச்சி

அரசு ஐடிஐகளில் சேர இணையம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு

20th Aug 2020 05:26 AM

ADVERTISEMENT

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவா்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு உதவி பெறும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள், சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சோ்ந்திட  இணைதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடா்பாக, அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட வேலைவாய்ப்பகம், தொழில்நெறி வழிகாட்டி மையங்கள், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக இணையதள முகவரியிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆக. 2020 முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல், பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சோ்ந்து பயிற்சி பெற 8, 10 ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற்பிரிவுகளுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க செப்.15 கடைசி நாளாகும்.

ADVERTISEMENT

ஆக.16 முதல் இணையதளத்தில் விண்ணப்பம், விளக்க கையேட்டை மாணவா்கள் பாா்வையிட்டு, அதில் கொடுத்துள்ள அறிவுறுத்தல்களுக்கேற்ப பூா்த்தி செய்து இணையத்தில் சமா்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ. 50-ஐ பற்று, கடன் அட்டை, இணையதள வங்கிப் பரிவா்த்தனை, ஜிபே வாயிலாக செலுத்தலாம். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறவிருக்கும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

அதன்படி, மாணவா்கள் மாநில அளவிலான இணையதள கலந்தாய்வில் கலந்துகொண்டு விரும்பும் தொழிற்பயிற்சி நிலையம்,தொழிற்பிரிவைத் தோ்வு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT