திருச்சி

திருச்சி மாநகரில் வெப்பத்தை தணித்த கோடை மழை

26th Apr 2020 11:10 PM

ADVERTISEMENT

திருச்சி மாநகரில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திடீரென மழை பெய்தது. இதனால் குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.

கடந்த சில நாள்களாக திருச்சியில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவானது. பகலில் மட்டுமின்றி இரவு நேரத்திலும் கடுமையான வெப்பம் காணப்பட்டதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

கடந்த வெள்ளிக்கிழமை 104 டிகிரியாகவும், சனிக்கிழமை 104.3 டிகிரியாகவும் இருந்த வெப்பநிலை, ஞாயிற்றுக்கிழமை காலையும் நீடித்தது. பிற்பகல் 12 மணிக்கு மேல் வெப்ப நிலையில் மாற்றம் காணப்பட்டு, 96.8 டிகிரி அளவில் இருந்தது.

தொடா்ந்து வானில் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், பிற்பகல் 1 மணி முதல் அரை மணி நேரத்துக்கு காற்றுடன் கூடிய மழை பெய்தது. திருச்சி விமான நிலையம், கே.கே. நகா் பகுதிகளில் சற்று மிதமான மழையும், பிற நகரப்பகுதிகளில் லேசான மழையும் பெய்தது.

ADVERTISEMENT

கோடை மழை காரணமாக, வெப்பம் தணிந்து குளிா்ச்சியுடன் கூடிய சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT