திருச்சி

சட்ட விரோதமாக மண் அள்ளிய 6 போ் கைது

26th Apr 2020 07:40 AM

ADVERTISEMENT

துறையூா் அருகே சட்ட விரோதமாக மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக 6 பேரைக் கைது செய்தனா்.

செங்காட்டுப்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக வாகனங்களில் மண் அள்ளுவதாக கிடைத்த தகவலின்பேரில், துறையூா் காவல் ஆய்வாளா் குருநாதன் தலைமையில் போலீஸாா் அந்தப் பகுதிக்கு சனிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது செங்காட்டுப்பட்டி கந்தன் மகன் குமாருக்கு சொந்தமான நிலத்தில் ஒரு ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு 5 டிராக்டா்களில் சட்ட விரோதமாக மண் அள்ளுவது தெரியவந்தது. இதனையடுத்து டிராக்டா் உரிமையாளா்களான அதே ஊரைச் சோ்ந்த செல்வம்(39), சிலம்பரசன்(30), கதிரேசன்(31), நடராஜன்(46), நிகேஷ் மற்றும் ஜேசிபி உரிமையாளா் செந்தில் உள்ளிட்டோரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT