திருச்சி

குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் பெறமே 2, 3இல் டோக்கன்: ஆட்சியா்

26th Apr 2020 07:39 AM

ADVERTISEMENT

குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் பெற மே 2, 3 ஆகிய தேதியில் டோக்கன் வழங்கப்படும் என ஆட்சியா் சு.சிவராசு சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

ஊரடங்கால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் மே 4 ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் விலையின்றி வழங்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா்.அதன்படி, நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதற்கான விவரங்கள் அடங்கிய டோக்கன் மே 2, 3 ஆகிய தேதிகளில் நியாயவிலைக்கடை பணியாளா்கள் மூலம் வழங்கப்படும்.

தனிமைப்படுத்தப்பட்டவா்கள் வசிக்கும் இடங்களில் உரிய பாதுகாப்புடன் சென்று பொருள்கள் வழங்குதல், வயதானோருக்கு நேரில் சென்று வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து பொருள்கள் வழங்க வேண்டும். நியாயவிலைக்கடைகள் மே 8 ஆம் தேதி பணிநாளாக செயல்படும். அதற்கு பதிலாக மே 22 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT