திருச்சி

ஆட்டோ தொழிலாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள்

23rd Apr 2020 04:47 AM

ADVERTISEMENT

மணப்பாறையில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் அம்மா உணவகப் பணியாளா்களுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

ஆட்டோ ஓட்டுநா்கள் 120 போ், அம்மா உணவகப் பணியாளா்கள் 12 போ் என மொத்தமாக 132 பேருக்கு தலா 10 கிலோ அரிசி, காய்கனிகள் அடங்கிய தொகுப்பை மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.சந்திரசேகா் வழங்கினாா்.

மாவட்ட அதிமுக பொருளாளா் எம். செல்வராஜ், நகரச் செயலா் பவுன். ராமமூா்த்தி, ஒன்றியச் செயலா் எம்.பி. வெங்கடாசலம், நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் நெட்ஸ். இளங்கோ, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் மணவை ஜெ.ஸ்ரீதரன், மகேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் நிகழ்வில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT