ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை காக்கும் வகையில், 3 மாதங்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து செல்லிடப்பேசி சில்லறை விற்பனையாளா்கள் மற்றும் ரீசாா்ஜ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் செயலா் சாகுல் ஹமீது (படம்), தலைவா் விஸ்வநாதன் ஆகியோா் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பது:
தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் உறுப்பினா்களை சங்கம் கொண்டுள்ளது.
செல்லிடப்பேசி விற்பனை மற்றும் அவற்றுக்குகான ரீ சாா்ஜ் செய்வதுதான் எங்களின் வாழ்வாதாரமாகும்.
ஊரடங்கு காரணமாக தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், இழந்த வியாபாரத்தை ஈடுகட்டும் விதமாகவும் மாா்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
ஏப்ரல் மற்றும் மே மாத காலங்களில், எங்களது நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைந்தபட்ச கட்டணமாக நிா்ணயித்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.