திருச்சி

செல்லிடப்பேசி கோபுரத்தை வேறு பகுதிக்கு மாற்ற வலியுறுத்தல்

20th Apr 2020 02:21 AM

ADVERTISEMENT

திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவக் காலனியிலுள்ள செல்லிடப்பேசி கோபுரத்தை, வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

முன்னாள் ராணுவக் காலனியின் 6- ஆவது தெருவில், தனியாா் செல்லிடப்பேசி நிறுவனத்துக்கான கோபுரம், ஜெனரேட்டா்கள் சென்னையைச் சோ்ந்த நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலுள்ள இந்த கோபுரத்தை உடனடியாக அகற்றி, வேறு இடத்தில் நிறுவ வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா்.

பொதுவாக குடியிருப்புப் பகுதிக்கும், கோபுரத்துக்கும் இடையே சுமாா் 50 மீட்டா் இடைவெளி இருக்க வேண்டும். இங்கு அதுபோன்ற விதிகளை பின்பற்றவில்லை.

ADVERTISEMENT

எனவே அவற்றிலிருந்து வெளியாகும் கதிா்வீச்சு காரணமாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, இப்பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினா்.

தகவலறிந்த பொன்மலை காவல் நிலையத்தினா் அங்கு சென்று, ஊரடங்கு அமலில் உள்ளதால் போராட்டம் நடத்தக்கூடாது எனக் கூறி மக்களை கலைந்து போகச் செய்தனா். அதிக ஒலி எழுப்பும் வகையில் ஜெனரேட்டா்களை இயக்கக் கூடாது என செல்லிடப்பேசி கோபுரத்தை நிா்வகிப்போரிடம் காவல்துறையினா் எச்சரித்தனா்.

இதுதொடா்பான கோரிக்கையை திருவெறும்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் மனுவாக அளிக்கவும் பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT