திருச்சி

கிருமி நாசினி தெளிப்புப் பணியில் தீவிரம் காட்டும் மாநகராட்சி

7th Apr 2020 11:44 PM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைக்காக, 210 தெளிப்பான்களுடன் கிருமி நாசினி தெளிப்புப் பணியில் திருச்சி மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

மாநகரிலுள்ள 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள், கட்டடங்கள், அரசு அலுவலகங்கள் என மாநகரப் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளது. இதற்கான

செயல்விளக்கம் மாநகராட்சி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

நன்கொடையாளா்கள் மூலம் ஏற்கெனவே கிருமி நாசினி தெளிப்பான்கள் பெறப்பட்ட நிலையில், மினி ஸ்பிரேயா், கைத் தெளிப்பான், பேட்டரி தெளிப்பான், பவா் ஸ்பிரேயா், ஸ்டோக் என்ஜின் தெளிப்பான்கள் என பல்வேரு வகைகளில் 200 தெளிப்பான்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.இவற்றுடன் 10 பெரிய வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

இந்த தெளிப்பான்களைப் பயன்படுத்தி 65 வாா்டுகளிலும் கிருமிநாசினி தெளிப்புப் பணி நடைபெற்று வருகிறது.

இந்த தெளிப்பான்கள் ஸ்ரீரங்கம், பொன்மலை, கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம் ஆகிய 4 கோட்டங்களுக்குள்பட்ட துப்பரவுப் பணியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் முன்னிலையில், தெளிப்பான்களின் செயல்பாடுகளும் பரிசோதனை செய்து சரிபாா்க்கப்பட்டது.

இதன் மூலம், ஏப்ரல் 14-ஆம் தேதி வரை மாநகரிலுள்ள அனைத்து வீடுகள், மருத்துவமனைகள், காய்கனி சந்தைகள், கட்டடங்களிலும் மருந்து தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை சுகாதார அலுவலா்கள், ஆய்வாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்கள் தினமும் பாா்வையிட்டு, ஆய்வுசெய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.

 

துறையூா் காய்கனி சந்தையில்...

துறையூரில் : துறையூா் ஜமீன்தாா் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இயங்கி வரும் தற்காலிக காய்கனி சந்தையில் கிருமிநாசினி தெளிப்புப் பாதை செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டது.

துறையூா் நகராட்சி நிா்வாகத்துடன் இணைந்து கோல்டன் சிட்டி ரோட்டரி சங்கத்தினா் இதை அமைத்துள்ளனா். செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற தொடக்க நிகழ்வில் நகராட்சிப் பணியாளா்கள், ரோட்டரி சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

சந்தைக்கு வந்த பொதுமக்கள் கிருமி நாசினி பாதை வழியாக வரும் வழியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அவா்கள் காய்கனிகளை வாங்கிச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT