மணப்பாறை நகரின் 14- ஆவது வாா்டுக்குள்பட்ட காந்தி நகரில், நடமாடும் காய்கறி அங்காடி விற்பனையை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.சந்திரசேகா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
காய்கனி சந்தைகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிா்க்கும் வகையில், மணப்பாறை நகராட்சியில் வாா்டுகள் தோறும் நடமாடும் காய்கறி அங்காடி மூலம் விற்பனை நடைபெற உள்ளது.
ரூ.100-க்கு பல்வேறு காய்கனிகளைக் கொண்ட தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கி, சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.சந்திரசேகா் முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தாா்.
நகர அதிமுக செயலா் பவுன்.ராமமூா்த்தி, துணைச் செயலா் பத்தி.பாஸ்கா், நகராட்சி ஆணையா்(பொ) சுப்பிரமணி, சுகாதார ஆய்வாளா் நெடுமாறன் உள்ளிட்ட பலா் நிகழ்வில் பங்கேற்றனா்.
ADVERTISEMENT