திருச்சி

பெட்ரோல் நிலையம் அருகே தீவிபத்து

5th Apr 2020 03:40 AM

ADVERTISEMENT

மணப்பாறையில் பெட்ரோல் பங்க் அருகேயுள்ள திறந்தவெளி பகுதியில் சனிக்கிழமை திடீரென தீப்பிடித்தது.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் அரசு நிலையப்பாளையம் கிராமத்தில் சுந்தர்ராஜன் என்பருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. சனிக்கிழமை மதியம் பெட்ரோல் பங்க் அருகில் இருந்த திறந்தவெளி பகுதியில் திடீரென தீ ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதி இளைஞா்கள் விரைந்து வந்து ஊழியா்களுடன் இணைந்து தீயை அணைத்தனா். தகவலறிந்து அங்கு வந்த மணப்பாறை நிலைய அதிகாரி கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் காட்டுப்பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை முழுவதுமாக அணைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT