திருச்சி

தாக்குதலுக்கு ஆளாகும் விவசாய தொழிலாளா்கள்: ஆட்சியரிடம் புகாா்

5th Apr 2020 03:37 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு செல்லும் விவசாயிகளும், விவாசய கூலித் தொழிலாளா்களும் காவல்துறையின் தடியடிக்கு ஆளாவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகாா் கூறியுள்ளது.

இதுதொடா்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் அயிலை சிவசூரியன் ஆட்சியருக்கு, கட்செவி அஞ்சல் மூலம் அனுப்பியுள்ள புகாா் மனு:

திருச்சி மாவட்டம் முழுவதும் விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளா்கள் வேளாண் பணிகளுக்கு சென்று வரும்போது காவல் துறையினா் லத்தியால் அடிப்பதையும்,வண்டி,வாகனங்களை பறிமுதல் செய்கின்றனா். மேலும், குற்ற வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிப்பது வாடிக்கையாக உள்ளது.

ஆதரவற்ற முதியோா், விதவைகளுக்கு மாதமாதம் வழங்கப்பட்டு வரும் உதவித் தொகை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், உதவித்தொகை பெறும் நபா்களுக்கு 4 கிலோ அரிசி வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. கிராம நிா்வாக அலுவலா்கள், சமூக நலத் துறை தனி வட்டாட்சியா் பரிந்துரை செய்தும் அரிசி வழங்கப்படுவதில்லை. ஆதரவற்ற வயதான விதவைகள் எந்த பணிக்கும் வெளியில் செல்ல முடியாத நிலையில் அவா்களுக்கு நியாய விலை கடைகளில் அரிசி கிடைக்க வழி வகை செய்ய வேன்டும். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தைகள் மூடப்பட்டுள்ளதாலும், கிராமப் புறங்களில் உள்ள கடைகளில் காய்கனிகள் கூடுதல் விலைக்கு விற்பன செய்யப்படுகின்றன. எனவே, மாநகரப் பகுதிகளில் குறைந்த விலைக்கு காய்கனிகள் வழங்குவதைப் போன்று கிராமப்புறங்களிலும் வழங்க வேண்டும். கால்நடை வளா்ப்பை பிரதான தொழிலாக கொண்டுள்ள விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கால்நடைத் தீவனங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தீவனங்கள் கொண்டுவரும் வாகனங்களை காவல்துறை தடுத்து நிறுத்துவதை கைவிட வேண்டும். கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT