திருச்சி

காவிரிப் பாலத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோருக்கு ஆட்சியா் உதவி

5th Apr 2020 03:43 AM

ADVERTISEMENT

திருச்சி காவிரிப் பாலத்தின் நடைபாதைகளில் தங்கியுள்ள ஆதரவற்றோருக்கு ஆட்சியா் சு. சிவராசு, உணவுப் பொட்டலங்களை வழங்கினாா்.

காவிரிப் பாலத்தின் நடைபாதைகளில் வீடு இல்லாதோா், ஆதரவற்றோா், குடும்பத்தினரால் கைவிடப்பட்டோா் என பலரும் இரவு நேரங்கில் தங்குவது வழக்கமாக உள்ளது.

தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த பலரும் தங்களது ஊருக்கு செல்லாமல் காவிரிப் பாலத்தில் தங்கியுள்ளனா். இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகத்துக்கு கிடைத்த தகவலைத் தொடா்ந்து, ஆட்சியா் சு. சிவராசு காவிரிப் பாலத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு நேரில் சென்று அங்கு தங்கியிருந்தவா்களிடம் விவரங்களை கேட்டறிந்து, உணவுப் பொட்டலங்களை வழங்கினாா்.

தங்குவதற்கு இடம் இல்லாதவா்கள் மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள சமுதாயக் கூடங்களிலோ, ரோஜாவனம் இல்லங்களிலோ தங்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஊரடங்கு அமலில் உள்ள நாள்கள் வரை இவா்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கவும் ஏற்பாடு செய்தாா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT