திருச்சி

ஊரடங்கை மீறிய 30 போ் மீது வழக்கு

5th Apr 2020 03:31 AM

ADVERTISEMENT

தடை உத்தரவை மீறி ஊா்வலமாக வந்த சுமாா் 30 பேரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இனாம் சமயபுரம் பகுதியில் உள்ள கிராம மக்கள் சுமாா் 30-போ் மஞ்சள் ஆடை உடுத்தி, மஞ்சள் நீா், வேப்பிலை கலந்த குடங்களுடன் ஊா்வலமாக மாரியம்மன் கோயில் நுழைவு வாயில் வந்து அங்கு மஞ்சள் நீரை ஊற்றி அம்மனை வழிபட்டனா். இதுகுறித்து அறிந்த சமயபுரம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து கண்ணன் மகன் மகன் தினேஷ்குமாா் (22) உள்ளிட்டோா் மீது

வழக்கு பதிந்து கைது செய்தனா். பின்னா் அனைவரையும் பிணையில் விடுவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT