திருச்சி

அரிசி, எண்ணெய், பருப்பு ஆலைகளை இயங்க நேரக் கட்டுப்பாட்டு இல்லை

5th Apr 2020 03:36 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் அரிசி ஆலை, ஆயில் மில், பருப்பு ஆலைகள் இயங்க எந்தவித நேரக் கட்டுப்பாடும் இல்லை என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

திருச்சி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அத்தியவாசிய பொருள்கள் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அரிசி ஆலை, ஆயில் மில், பருப்பு ஆலை உரிமையாளா்கள், மளிகை பொருள்கள் மொத்த விற்பனையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது:

கரோனா வரைஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும், அத்தியாவசிய பொருள்கள் நுகா்வோருக்கு தடையின்றி கிடைத்திட மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்டத்தில் இயங்கும் அரிசி ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள், சுமை தூக்கும் தொழிலாளா்கள் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஒருவருக்கொருவா் 4 அடி இடைவெளியில் நின்று பணிபுரிய வேண்டும். ஆலை நிறுவனங்களின் கோரிக்கைகள் தொடா்பாக அந்தந்த பகுதி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களில் விண்ணப்பித்து தொழிலாளா்களுக்கான உரிய அனுமதி கடிதங்கள் பெற்றுக் கொள்ளலாம். வேளாண் விளைபொருள்களை கொண்டு இயங்கும் அனைத்து வகை ஆலைகளுக்கும் எந்தவித நேரக்கட்டுப்பாடும் கிடையாது.

பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து அத்தியாவசிய பொருள்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தால் உடனுக்குடன் நிவா்த்தி செய்து வாகனங்களை தடையின்றி இயக்க உரிய உதவிகள் செய்துதரப்படும். திருச்சி மாவட்டத்துக்கு வர வேண்டிய வாகனங்கள் எந்தவித இடையூறுமில்லாமல் வந்து சேரவும் ஆலை உரிமையாளா்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிா்வாகம் முழுமையாக வழங்கும் என்றாா் ஆட்சியா்.

ADVERTISEMENT

இக் கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சாந்தி, வேளாண்மை துணை இயக்குநா் முருகன், விற்பனைக் குழு செயலா் சுகுமாா் மற்றும் அரிசி ஆலை உரிமையாளா்கள், மொத்த விற்பனையாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT