திருச்சி

காவிரிப் பாலத்தில் இயங்கிய காய்கனி சந்தை இடமாற்றம்

1st Apr 2020 11:01 PM

ADVERTISEMENT

திருச்சி காவிரிப் பாலத்தில் இயங்கி வந்த தற்காலிக காய்கனி சந்தை, வியாழக்கிழமை முதல் சத்திரம் பேருந்துநிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.

ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்குத் தடையில்லாமல் காய்கனிகள் கிடைக்க ஏதுவாக, தற்காலிக சந்தைகள் ஏற்படுத்தப்பட்டன. இதன்படி, காவிரிப் பாலத்திலும் தாற்காலிக காய்கனி சந்தை இயங்கி வந்தது.

இந்நிலையில் இச்சந்தையை சத்திரம் பேருந்துநிலையத்துக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வியாழக்கிழமை முதல் சத்திரம் பேருந்துநிலையப் பகுதியில் சந்தை இயங்கும்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT