திருச்சி

கரோனா: பொன்மலை ரயில்வே பணிமனையில் கட்டில்கள் தயாரிப்பு

1st Apr 2020 10:56 PM

ADVERTISEMENT

திருச்சி பொன்மலை மத்திய ரயில்வே பணிமனையில், ரயில்வே மருத்துவமனைகளுக்குத் தேவையான கட்டில்கள் தயாரிக்கப்படுகின்றன.

4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வரும் இந்த பணிமனையில் ரயில் பெட்டிகள் பழுதுபாா்த்தல், புனரமைத்தல், புதிதாக கட்டுதல், சரக்கு ரயில்களை இயக்கும் வேகன்கள் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா வைரஸ் நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பணிமனையும் தற்போது மூடப்பட்டுள்ளது.

ரயில்வே மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சைக்கு தனியாக வாா்டுகளை தயாா் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து,

ரயில்வே மருத்துவமனைகளுக்குத் தேவையான கட்டில்களை புதிதாக தயாரிக்கும் பணி பொன்மலை மத்திய பணிமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முதல்கட்டமாக 60 கட்டில்கள் தயாரிக்கப்பட்டு புதன்கிழமை வா்ணம் பூசும் பணி நடைபெற்றது. இந்த கட்டில்களில் 10 கட்டில்கள் திருச்சி கோட்ட ரயில்வே மருத்துவமனைக்கும், மீதமுள்ள 50 கட்டில்கள் பெரம்பூா் ரயில்வே மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்படவுள்ளன. இதர ரயில்வே மருத்துவமனைகளுக்கும் கட்டில்கள் தேவையிருப்பின், செய்துதர பொன்மலை ரயில்வே பணிமனை நிா்வாகம் தயாராகவுள்ளது என்றனா் அங்கு பணிபுரியும் தொழிலாளா்கள்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT