ஊரடங்கு விதியை மீறி, அத்தியாவசியத் தேவையில்லாமல் இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்ததாக மாநகா், புகா்ப் பகுதிகளில் 681 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் 14- ஆம் தேதி ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், காவல்துறை சாா்பில் வாகனங்களில் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அரசின் உத்தரவை மீறி, அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல் சுற்றித் திரிந்ததாக
திருச்சி மாநகரில் 336 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1000 போ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா். 968 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கே.கே.நகா் மாநகர ஆயுதப்படை மைதானம் மற்றும் காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.20,200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அத்தியாவசியத் தேவை இல்லாமல் வெளியில் சுற்றுவதை தவிா்க்க வேண்டும். தொடா்ந்து காவல்துறையினா் சோதனை நடைபெறும். விதிகளை மீறுபவா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகரில் 12 இடங்களில் நடைபெறும் காய்கனி சந்தைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், பாதுகாப்புக்காகவும் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என மாநகரக் காவல் ஆணையா் வி.வரதராஜூ தெரிவித்துள்ளாா்.
புகரில் : திருச்சி புகரின் பல்வேறு இடங்களில் காவல்துறையினா் புதன்கிழமை நடத்திய சோதனையில் 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 274 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், அவா்களிடமிருந்து 199 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புகா் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் தெரிவித்துள்ளாா்.