திருச்சி

திருச்சி மத்திய சிறையில் போலீஸார் தீவிர சோதனை

DIN

செல்லிடப்பேசி, போதை பொருள்கள் வைத்துள்ளனரா என்பது குறித்து திருச்சி மத்திய சிறையில் கைதிகள் அறைகளில் போலீஸார் சனிக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்சி மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 1,800 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள கைதிகளிடம் செல்லிடப் பேசி மற்றும் போதை பொருள்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையிலும், சிறைக்குள் இத்தகைய தடை செய்யப்பட்ட பொருள்களை கொண்டுவராமல் தடுக்கவும்  திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர்  தலைமையிலான தனிப்படை போலீஸார் மாதந்தோறும் சோதனை நடத்தி வருகின்றனர். 
அதன்படி,  சனிக்கிழமை 
(செப்.21) காலை 6 மணிக்கு உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில் 35க்கும் மேற்பட்ட போலீஸார் மத்திய சிறையில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். 
அப்போது கைதிகள் அறை, உடைமைகள் பாதுகாக்கும் தனிஅறைகளில் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என சோதனை செய்தனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற சோதனையின் முடிவில் கைதிகளின்அறைகளில் இருந்து சிறை விதிகளுக்கு புறம்பாக பயன்படுத்தப்பட்டதாக எந்த பொருள்களும் கைப்பற்றப்படவில்லை. 
இதே போல் காந்திமார்க்கெட் பகுதியில் உள்ள மகளிர் சிறையில் கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் அருள்ஜோதி தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீஸார் சோதனை நடத்தியதில் எதுவும் சிக்கவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT