திருச்சி: மறியலில் ஈடுபட்ட காங்கிரஸார் கைது

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கண்டித்து திருச்சியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம்

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கண்டித்து திருச்சியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர், தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குறித்து தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி  தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி, தமிழகம் முழுவதும் புதன்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார்.
இதன்படி, திருச்சியில் அருணாசலம் மன்றம் முன்பு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி. ஜவஹர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்  தெற்கு மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், ரெக்ஸ், அன்பில் ராஜேந்திரன், முன்னாள் மாவட்டத்தலைவர்கள் சரவணன், ஆர்.சி.பாபு, கோட்டத்தலைவர்கள்  சிவாஜி சண்முகம், உள்ளிட்டோர், அமைச்சருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 
இதைத் தொடர்ந்து அமைச்சரைக் கண்டித்து காங்கிரஸார் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.  அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், மறியலில் ஈடுபட்ட 22 பேரைக் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com