திருச்சி

ஸ்ரீரங்கம்: வாய்க்காலில் பெண் சடலம் மீட்பு

17th Sep 2019 09:46 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள திம்மராய சமுத்திரம் தலைவாணி வாய்க்காலில் பெண் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
முன்னதாக, இதுகுறித்த தகவலின்பேரில், ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை அவர்கள் மீட்டனர். அந்த பெண் மஞ்சள் நிற புடவையும், பிரவுன் கலர் சட்டையும் அணிந்திருந்தார். இது குறித்துபோலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT