திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.20) நடைபெறுகிறது.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்களக்கு தேவையான பல்வேறு நிலைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆள்களை தேர்வு செய்யவுள்ளனர். 10ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ கல்வித்தகுதி உடையவர்கள் பங்கேற்கலாம். பங்கேற்கும் நபர்கள் தங்களது கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப்படத்துடன் வர வேண்டும் என மாவட்ட வேலைவாயப்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.